டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் கஜா புயல் நிவாரண நிதி

டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் கஜா புயல் நிவாரண நிதி
Updated on
1 min read

டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ரூபாய் ஏழு லட்சம் கஜா புயல் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காசோலையாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிக்காக தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள், தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புவரை கஜா புயல் சீரமைப்புக் காக ரூ.48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 நிவாரணத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ரூபாய் ஏழு லட்சம் கஜா புயல் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.  டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் துணைத்தலைவர் கி.பென்னேஸ்வரன், பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து ரூபாய் ஏழு லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in