சோனியா காந்தி தொகுதியில் மோடி பிரச்சாரம்

சோனியா காந்தி தொகுதியில் மோடி பிரச்சாரம்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கவும் தொண்டர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி பாஜகவின் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பெட்டிகளை 16-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in