

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உ.பி. அரசின் உயர் அதிகாரிகள் கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்தது.
அப்போது, சாலைகளில் ஆதரவற்று திரியும் பசுக்களுக்கு தங்குமிடங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவற்றை முறையாக பராமரித்து உணவளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதை எப்படி செயல்படுத்தலாம் என்று ஆலோசிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக ஒரு வாரத்தில் அரசுக்கு பரிந்துரை அளிக்குமாறு மாநில அரசின் தலைமைச் செயலாளர் அனுப் சந்தா பாண்டேவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் புல்தரை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அவை மீட்கப்படும் என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.