சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது

சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது
Updated on
1 min read

புதுடெல்லி: சர்​வ​தேச செவிலியர் தினத்​தையொட்டி மத்​திய அரசு சார்​பில் சிறந்த செவிலியர்​களுக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்​கேல் விருது வழங்​கப்​படு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விருது விழா டெல்​லி​யில் உள்ள குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அப்​போது சென்னை அரசு செவிலியர் கல்​லூரி முதல்​வர் சங்​கர் சண்​முகம் உட்பட 15 பேருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் விரு​தினை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

செவிலியர் கல்​வி​யில் 26 ஆண்டு கால சேவையை அங்​கீகரிக்​கும் வகை​யில் சங்​கர் சண்​முகத்​துக்கு இந்த விருது வழங்​கப்​பட்டு உள்ளது. கர்​நாட​காவை சேர்ந்த கவி​தா, கேரளாவை சேர்ந்த மஞ்சுமோல் உள்​ளிட்​டோரும் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்.

இந்த விழா​வில் குடியரசுத் ​தலை​வர் திர​வுபதி முர்மு பேசியதாவது: கருணை, அர்ப்​பணிப்பு உணர்​வு, நாட்​டிற்கு சேவையாற்​றும் நோக்​குடன் செவிலியர்​கள் பணி​யாற்றி வருகின்றனர். அவர்​களின் சேவை​களுக்கு மரி​யாதை செலுத்​தும் வித​மாக தேசிய பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் விருதுகள் வழங்கப்பட்டு உள்​ளன. நோயாளி​களைப் பராமரிப்​ப​தில் தாய் உள்​ளத்​துடன் அவர்​கள் செயல்​படு​கின்​றனர். நைட்​டிங்​கேல் விருது பெற்ற அனை​வரை​யும் பா​ராட்​டு​கிறேன்​. இவ்​வாறு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு பேசி​னார்​.

சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in