Last Updated : 20 Dec, 2018 04:13 PM

 

Published : 20 Dec 2018 04:13 PM
Last Updated : 20 Dec 2018 04:13 PM

பாஜக ஆட்சியில் இருந்து அகலும் பயணம் தொடங்கிவிட்டது: சிவசேனா விளாசல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது பாஜகவின் மற்றொரு வெற்று வார்த்தை, பாஜக ஆட்சியில் இருந்து அகலும் பயணம் தொடங்கிவிட்டது என்று சிவசேனா கட்சி கடுமையாக விளாசியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் இன்று பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வாக்குறுதி என்பது பாஜகவின் மற்றொரு வெற்று வார்த்தையாகவே பார்க்கிறோம். சமீபத்தில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் கூட, பாஜக இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத், பகவத்கீதையில் வார்த்தையைக் கோடிட்டு பேசிய வார்த்தையில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை பாஜக,  சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகதவ் பகவத் கீதையைக் கோடிட்டு, அகங்காரம் என்ற வார்த்தையின் பயன் குறித்துப் பேசினார். ‘நான்’ செய்வதுதான் சிறந்தது, ‘நான்’ இதைச் செய்தேன் என்று ‘நான்’ என்ற வார்த்தை குறிக்கிறது.

ஆனால், பாஜக சமீபத்தில் அடைந்த தேர்தல் தோல்வியால் எந்த விதமான பாடங்களும் கற்கவில்லை. கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து பாஜக இன்னும் விழிக்கத் தயாராகஇல்லை.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜகவுக்கு நெருக்கடிகள் இருக்கிறது. ஆனால், எப்போது கடவுள் ராமருக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறதோ. 25 ஆண்டுகளாகத் திறந்தவெளியில் இருக்கிறார்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் எண்ணம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாகும். அதற்காகத்தான் கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், பாஜகவைப் பொருத்தவரை அயோத்தியில் ராமர் கோயில் என்பது மற்றொரு வெற்றுவாக்குறுதிதான். பாஜக ஆட்சியில் இருந்து அகற்றும் பயணம் தொடங்கி இருக்கிறது.

மத்தியிலும், மாகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சியில் இருந்தும் என்ன பயன். ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவரவில்லை. பாபர் மசூதி இடித்தவர்கள் மீதுபோடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறமுடியவில்லை, குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்துவிட்டநிலையில் இனி எல்.கே.அத்வானி குடியரசுத் தலைவராக முடியாது.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x