Last Updated : 29 Dec, 2018 03:23 PM

 

Published : 29 Dec 2018 03:23 PM
Last Updated : 29 Dec 2018 03:23 PM

14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: இளநிலை பொறியாளர்களை தேர்வு செய்ய ரயில்வே முடிவு

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளர்களை விரைவில் நியமனம் செய்வதற்கான பணிகளை ரயில்வே துறை விரைவில் தொடங்கஉள்ளது. அதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி முதல்வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

64 ஆயிரம் லோகோ பைலட், 62 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், கேங்க்மேன் ஆகியோருக்கான இடங்களை நிரப்பும் பணியில் ரயில்வே மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட தேர்வுகளை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக இளநிலை பொறியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது. இந்த இளநிலை பொறியாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்கான முறையான ரயில்வே துறையின் அறிவிப்பு ஜனவரி 2 அல்லது அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் எனத் தெரிகிறது. ஜனவரி மாதம் முடிவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வைக்கக் கேட்டுக்கொள்ளப்படும்.

 

இந்த இளநிலை பொறியாளர் பணிக்கான கல்வித்தகுதி, பொறியியல் படிப்பில் டிப்ளமோ படித்திருத்தல் போதுமானது, பி.இ. பி.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

64 ஆயிரம் துணை ரயில்வே பைலட், 62 ஆயிரம் உதவியாளர்களை நிரப்பும்பணிகள் தற்போது தீவரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிக்காக ஏறக்குறைய 2 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் துணை லோகோ பைலட், உதவியாளர்கள் பணிக்கான தேர்வு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பும், கேங்க்மேனுக்கு உடற்தகுதி சோதனையும் நடைபெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளநிலை பொறியாளர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ரயில் பெட்டிகள் பராமரிப்பு, மின்னணு சேவை, மின்னணு பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

வழக்கமான முறையில் விண்ணப்பம் செய்யாமல், காகிதங்களைச் சேமிக்கும் வகையில், இந்த ஆண்டு அனைத்து விண்ணப்பங்களும் ஆன்-லைன் மூலம் நிரப்பி அனுப்ப வேண்டும், தேர்வுகளையும் ஆன்-லைன் மூலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். அதில் ரூ.400 தேர்வு எழுதியபின் திருப்பித் தரப்படும். எஸ்.சி. எஸ்டி பிரிவு மாணவர்கள் , மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். இவர்கள் தேர்வு எழுதியபின் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x