Published : 05 Sep 2014 10:51 AM
Last Updated : 05 Sep 2014 10:51 AM

கட்டாய காவல் துறை சரிபார்ப்பு முறையை கைவிட மத்திய அரசு பரிசீலனை: அரசு வேலையில் சேருவோருக்கு சலுகை

அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுவோர் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழை (வெரிஃபிகேஷன்) கட்டாயமாக சமர்ப்பிக்கும் நடை முறையைக் கைவிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இப்போது உள்ள நடை முறைப்படி அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள், பணியில் சேர்வதற்கு முன்பு காவல் துறையினரிடமிருந்து சரி பார்ப்பு சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டியிருக்கிறது. இதுபோல் விண்ணப்பத்துடன் இணைக்கும் சான்றிதழ்களின் நகல்களில் கெசட்டடு அதிகாரியின் சான்றொப்பம் பெறுவதும் கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சமீபத்தில் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பல்வேறு அரசுத் துறைகளில் தற்போதுள்ள நடை முறையை ஆய்வு செய்து, பல்வேறு விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங் களுக்கு சுய சான்றொப்பம் அளித் தால் போதும் என்ற நடைமுறையை படிப்படியாக அமல்படுத்த முயற்சி செய்யுங்கள். இந்த புதிய முறை மக்களுக்கு வசதியாக இருப்பதுடன், பண விரயம், நேர விரயம் தவிர்க்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரும், பாஸ் போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களும் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழை கட்டாயமாக சமர்ப் பிக்கும் நடைமுறையைக் கைவிடு வது குறித்து மத்திய உள் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும் விண்ணப்பங் களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களுக்கு சுய சான் றொப்பம் அளித்தால் போதும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை கேட்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மத்திய பணி யாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறையும் இம்முடிவுக்கு ஆதரவு தெரி வித்துள்ளது.

காவல் துறை சரிபார்ப்பின் போது, சம்பந்தப்பட்ட நபர் அளிக் கும் தகவல்களின் அடிப்படையில் அவருக்கு கிரிமினல் வழக்குடன் தொடர்பு இருக்கிறதா என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக் கிறது.

மேலும் அந்த நபர் கடைசியாக வசித்த இருப்பிடத் தகவலை மட்டுமே அளிப்பதால் காவல் துறை யின் அறிக்கை 100 சதவீதம் உண் மையானதாக இருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட நபரின் அண்டைவீட்டார் அளிக்கும் தகவல் களும் சில நேரங்களில் நம்பக மில்லாமல் இருக்கின்றன. எனவே அரசு வேலை, பாஸ்போர்ட் விண் ணப்பித்தலுக்காக கடைபிடிக்கப் பட்டு வரும் கட்டாய காவல் துறை சரிபார்ப்பு முறையைக் கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x