

பரம்பரை பரம்பரையாக தேவஸ் தான கோயில்களில் பணியாற் றும் அர்ச்சகர்களை அவர்களது வயதை காரணம் காட்டி சம்பந்தப் பட்ட தேவஸ்தானமோ அல்லது அரசோ நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது என விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி சுவரூபானந்த சுவாமி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் பல நூற்றாண்டுகளாக மிராசு அடிப்படையில் தேவஸ் தானத்திற்கு சொந்தமான பல் வேறு கோயில்களில் பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பிரதான அர்ச்ச கர்களில் 65 வயது நிரம்பிய வர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டாய ஓய்வளித் துள்ளது. இதற்கு அர்ச்சகர்கள், பல்வேறு இந்து சமய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் பிரதான அர்ச்சகராக பணியாற்றி வந்த ரமண தீட்சிதரை யும் தேவஸ்தானம் அண்மையில் பதவி நீக்கம் செய்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென் றுள்ள நிலையில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பணியாற்றி வந்த மேலும் 6 அர்ச்சகர்களுக்கு வயது உச்ச வரம்பை காரணம் காட்டி தேவஸ்தானம் கட்டாய ஓய்வு அளித்தது. இதனை எதிர்த்து 6 பேரும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், மிராசு அடிப்படையில், பல நூற்றாண்டுகளாக கோயி லில் சேவை செய்து வரும் அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ரமண தீட்சிதர் தன்னை மீண்டும் பிரதான அர்ச்சக ராக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசாகப்பட்டி னம் சாரதா பீடாதிபதி சுவரூபா னந்த சுவாமி நேற்று திருப்பதிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறிய போது, "மிராசு அர்ச்சகர்கள் என்ப வர்கள் காலம்காலமாக குறிப்பிட்ட கோயிலில் அர்ச்சகராகப் பணி புரிந்து வருபவர்கள். இவர்களை நீக்க தேவஸ்தானத்திற்கோ, அரசுக்கோ அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.