கப்பற்படை, ராணுவத்தை பலப்படுத்த 3,000 கோடி ரூபாய்க்கு போர் தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

கப்பற்படை, ராணுவத்தை பலப்படுத்த 3,000 கோடி ரூபாய்க்கு போர் தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்
Updated on
1 min read

கப்பற்படை மற்றும் ராணுவத்தை பலப்படுத்த ரூ.3,000 கோடிக்கு போர்க் கருவிகளை கொள்முதல் செய்ய, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ‘பாதுகாப்புத் துறை ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில்’ கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத் தில், கப்பற்படை மற்றும் ராணுவத் துக்கு ரூ.3,000 கோடியில் புதிதாக போர்க் கருவிகள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட் டது.

இதன்படி கப்பற்படையில் உள்ள 2 போர்க் கப்பல்களுக்கு, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிநவீன பிரம் மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை கள் கொள்முதல் செய்யப்படும். அந்த ஏவுகணைகள், 2 போர்க் கப்பல்களின் முக்கிய ஆயுதமாகப் பொருத்தப்படும்.

மேலும், ராணுவத்தில் உள்ள ‘அர்ஜுன் பீரங்கிப் படை’க்கு மிக பலம் பொருந்திய மீட்பு பீரங்கிகள் வாங்கப்படும். போர் நடக்கும் போது தாக்குதல் நடத்தவும், பழுதடைந்த பீரங்கிகளை சரி செய்யவும், மலைப்பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பீரங்கிகளை மீட்கவும் பெரிதும் பயன்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in