பிரதமர் மோடி, ராகுல் காந்தி தெலங்கானாவில் பிரச்சாரம்

பிரதமர் மோடி, ராகுல் காந்தி தெலங்கானாவில் பிரச்சாரம்
Updated on
1 min read

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் வெள்ளிக்கிழமை (டிச.7) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்வு பெறுகிறது. இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

ஹைதராபாத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். மாநில வளர்ச்சிக்காக பாஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று ஹைதராபாத் தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில், முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடிக்கு அடிமை ஆகிவிட்டார் என சாடிய அவர், காங்கிரஸை ஆதரிக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ், ரஹமத் நகரில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியுடன், சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார்.

சந்திரபாபு நாயுடு நேற்று காலை முதல் மாலை வரை, ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது, சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in