Published : 03 Dec 2018 07:42 PM
Last Updated : 03 Dec 2018 07:42 PM

நான் பாஜக ஏஜெண்ட்டும் அல்ல, காங்கிரஸ் ஏஜெண்ட்டும் அல்ல: டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் காட்டம்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்களை அடுத்து தெலன்ஙானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மீது கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் தான் ‘மக்களின் ஏஜெண்ட்’ வேறு யார் ஏஜெண்டும் அல்ல என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டிஆர்எஸ் கட்சித் தலைவர் மீது அவர் பாஜக ஏஜெண்ட், காங்கிரஸ் ஏஜெண்ட் என்றெல்லாம் பலதரப்பு விமர்சாங்கள் எழுந்தன.  பாஜக-வின் பி-அணியைச் சேர்ந்தவர் என்று கடும் விமர்சனங்களும் எழுந்தன.

“பிரதமர் நரேந்திர மோடி என்னை சோனியாவின் ஏஜெண்ட் என்கிறார்... ராகுல் காந்தியோ நரேந்திர மோடியின் பி டீமைச் சேர்ந்தவன் நான் என்கிறார். பிறகு நான் யார் ஏஜெண்ட், இதென்ன  ஏஜெண்ட்கள் கதை?

நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன், நான் தெலங்கானா மக்களின் ஏஜெண்ட்” என்றார்.

ராகுல் காந்தி திங்களன்று, மோடி, ராவ், அசாசுதீன் ஒவைஸி அனைவரும் ஒருவரே. ஆகவே தெலங்கானா மக்கள் அவர்கள் பேச்சைக் கேட்க வேண்டாம் என்றார். மேலும் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியின் ரப்பர் ஸ்டாம்ப்.  ஓவைஸி பாஜகவின் சி- அணி.  ஓவைசியின் பணி என்னவெனில் பாஜக எதிர்ப்பு, டி.ஆர்.எஸ். எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதே என்று ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கினார்.

ஆனால் பிரதமர் மோடியோ, காங்கிரஸும், டி.ஆர்.எஸ்-உம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சட்டப்பேரவை தேர்தல்களில் நட்பு ரீதியான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தெலங்கானாவில் மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது என்று கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக சந்திரசேகர் ராவ் தெரிவிக்கும்போது, தெலங்கானா மட்டுமே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் என்றார்.  “மோடிஜீ உங்கள் அரசு 19 மாநிலங்களில் உள்ளது. எங்காவது விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம் தருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x