Published : 27 Dec 2018 09:43 AM
Last Updated : 27 Dec 2018 09:43 AM

கோல்ப் வீரர் உட்பட 2 பேர் வேட்டையாடியதாக கைது

உத்தரபிரதேச மாநிலம் பஹரைச் மாவட்டத்தில் கதர்நியாகாட் வனப்பகுதி அமைந்துள்ளது. இது மோதிப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது. இப்பகுதி யில் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் இருந்த சர்வதேச கோல்ப் வீரரும், துப்பாக்கிச் சுடுதல் வீரருமான ஜோதி ரந்த்வா, அவரது நண்பர் மகேஷ் விராஜ்தார் ஆகியோரை வனத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப் பட்டது. இதையடுத்து வனப் பகுதியில் வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மீது மோதிப்பூர் காவல் நிலையத்தில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக கதர்நியாகாட் பகுதி வனத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வனப்பகுதியில் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கதர்நியா காட் வனவாழ்வுச் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு காண்டாமிருகம், கரியால் முதலைகள், மான்கள், புலி, நீள அலகுடைய வெள்ளை நாரைகள், டால்பின்கள், முயல்கள் போன்ற அரிய வகை மிருகங்கள் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x