

கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் மெட்டிகுர்கி எனும் கிராமம் அருகே தனியார் பேருந்து ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். 10 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் ஐ.ஜி பரசிவமூர்த்தி, விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறோம் என்றார்.
விபத்துக்குள்ளான பேருந்து கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு புறப்பட்டது.