Last Updated : 03 Dec, 2018 04:16 PM

 

Published : 03 Dec 2018 04:16 PM
Last Updated : 03 Dec 2018 04:16 PM

அந்தமான் பழங்குடியால் அமெரிக்கர் கொல்லப்பட்டது எங்களின் தோல்வியல்ல: கடற்படைத் தலைவர் சுனில் லன்பா பேட்டி

அந்தமான் பழங்குடியினரால் அமெரிக்கர் கொல்லப்பட்டது கடலோரக் காவல்படைப் பாதுகாப்பின் தோல்வி என்று கருதவில்லை என்று இந்தியக் கடற்படையின் தலைவர் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுனில் லன்பா, ''அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டதைக் கடலோரக் காவல் படையின் தோல்வியாக நான் பார்க்கவில்லை.

அந்தமான் நிகோபர் தீவுகளைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணியாகத்தான் சாவ் வந்தார். அதற்கு முறையான அனுமதிகளையும் அவர் வாங்கியிருந்தார். ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்ட வழக்கை அந்தமான் நிகோபர் காவல்துறை விசாரித்து வருகிறது'' என்றார் அவர்.

கப்பற்படையைப் பலப்படுத்துவது குறித்துப் பேசிய சுனில் லன்பா, ''ஆயுதக்கிடங்கில் 56 போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். சுமார் 2.5 லட்சம் மீன்பிடிப் படகுகளில் தானியங்கி அடையாளக் கருவிகளைப் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன'' என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது?

யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றுவிட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்ததில்லை.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (26) என்ற இளைஞர், அந்த மக்களைத் தொடர்புகொள்வதற்காகவும் கிறிஸ்தவ மதத்தை போதிக்கவும் சமீபத்தில் அங்கு சென்றார். ஆனால் கடந்த 17-ம் தேதி பழங்குடியின மக்கள் ஜானைக் கொன்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x