Last Updated : 14 Dec, 2018 07:14 AM

 

Published : 14 Dec 2018 07:14 AM
Last Updated : 14 Dec 2018 07:14 AM

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிடம் வருமானவரித் துறையினர் 10 மணி நேரம் தீவிர விசாரணை: 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக பொதுச் செயலாளருமான‌ சசிகலா, சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டிக்கப் பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வருமானவரித் துறை அதிகாரிகள் ஜெயலலிதா வின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட‌ இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங் களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆவ ணங்கள், சொத்துகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை ஆராய்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சசிகலா உறவினர் களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து, இதில் முக்கிய பங்குதாரராக உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னை மண்டல வருமானவரித் துறை உதவி ஆணையர் வீரராகவன் தலைமையில் 7 அதிகாரிகள், இரு கார்களில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர். அப்போது, வருமானவரி சோதனை யில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை 5 பைகளில் அவர்கள் கொண்டு வந்தனர். பின்னர், சிறை கண்காணிப்பாளர் அறைக்கு அருகில் உள்ள தனி அறையில் சசிகலாவிடம் விசார ணையை தொடங்கினர்.

வீடியோவில் பதிவு

விசாரணையின்போது, சசிகலா விடம் வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துகளின் ஆவணங்களை காட்டி, அதற்கான வருமான ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர், கைப்பற்றப்பட்ட நகைகள், பணம், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பண பரிவர்த்தனை கள் தொடர்பாகவும் கேட்டதாக கூறப்படுகிறது.

சசிகலா அளித்த பதில்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த அதிகாரிகள், அதனை வீடியோ வாகவும் பதிவு செய்தனர்.

10 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணையில், சசிகலாவிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சொத்துகள், நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த பல கேள்விகளுக்கு சசிகலா, ‘‘ஆம்; இல்லை; தெரியாது; நினைவு இல்லை; எனக்கு தொடர்பு இல்லை; வழக்கறிஞர், தணிக்கையாளர் மூலம் பதில் அளிக்கிறேன்; முறையாக வருமான வரி கட்டப்பட்டுள்ளது'' என சுருக்கமாகவே பதில் அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருமானவரித் துறை அதிகாரி கள் நேற்று இரவு வரை சசிகலாவிடம் தொடர் விசாரணை நடத்தியதால், அவரது ஆதரவாளர் களும், அமமுக கட்சியினரும் சிறை வளாகத்தில் குவிந்தனர். நூற்றுக்கணக்கான பத்திரிகை யாளர்களும் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட் டிருந்தது.

சசிகலாவிடம் வருமான வரி அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x