Published : 23 Sep 2014 06:46 PM
Last Updated : 23 Sep 2014 06:46 PM

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல்: பாஜகவுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா சம்மதம் - கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்தது

பாஜகவுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா ஒப்புக் கொண் டுள்ளது. இதன்மூலம் கடந்த சில நாள்களாக நீடித்த கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவசேனா, பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடை பெற்றது.

பலகட்ட பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு பாஜகவுக்கு 119 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த பாஜக மாநிலத் தலைவர்கள் 135 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், இல்லையெனில் கூட்டணியே வேண்டாம் என்று பதிலளித்தனர். இதனால் கூட்டணியில் விரிசல் அதிகமானது.

கூட்டணியைக் காப்பாற்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து இரு கட்சி களின் மூத்த தலைவர்களும் மும்பை தாதரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிவசேனா தரப்பில் அதன் மூத்த தலைவர்கள் சஞ்சய் ராத், சுபாஷ் தேசாய், அனில் தேசாய் ஆகியோரும் பாஜக தரப்பில் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தேவேந்திர பாட்வானிஸ், மூத்த தலைவர்கள் ஏக்நாத் கட்சே, வினோத் தவ்டே ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இதில் சிவசேனா 151 தொகுதிகளிலும் பாஜக 130 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராத், சிவசேனா- பாஜக கூட்டணி தொடர்கிறது, இந்த கூட்டணி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் வினோத் தவ்டே நிருபர் களிடம் பேசியபோது, கூட்டணி உடைவதை இரு கட்சிகளும் விரும்பவில்லை, நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு புதிய உடன் பாட்டை எட்டியுள்ளோம் என்றார்.

காவி குதிரைகளை தடுக்க முடியாது

இதனிடையே சிவ சேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம் னாவில் நேற்றைய தலையங் கத்தில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனா, பாஜக கூட்டணி உடைய வேண்டும் என்று சில ஊடகங்கள் விரும்பின. கூட்டணி உடையுமா, உடையாதா என்பது குறித்து ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை சூதாட் டங்கள்கூட நடைபெற்றன.

மகாராஷ்டிரத்தில் 25 ஆண்டு களாக நீடிக்கும் சிவசேனா, பாஜக கூட்டணி இப்போதும் வலு வாக உள்ளது. இந்த கூட்டணி குதிரைக்கு ஒப்பானது. யாராலும் இந்த காவி குதிரைகளை தடுத்து நிறுத்த முடியாது.

மறுபுறம் காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி கோவேறு கழுதைபோல் காட்சியளிக்கிறது. அவற்றால் எந்த பயனும் இல்லை என்று சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x