

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கை விரைவாக நடத்தினார்.
மங்களூரைச் சேர்ந்த ஜான் மைக்கேல் டி'குன்ஹா, 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பணி யாற்ற தொடங்கினார். 2002-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தார்வார்ட், பெல்லாரி, பெங்களூர் ஆகிய இடங்களில் நீதிபதி, தலைமை நீதிபதியின் செயலாளர், உயர் நீதிமன்ற பதிவாளர் (கண்காணிப்பு) உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள் ளார். இந்நிலையில், கடந்த 2013 அக்டோபர் மாதம் முதல் ஜெய லலிதா மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர், இந்த வழக்கை விசாரித்த 5-வது நீதிபதி ஆவார்.
இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த 2003 நவம்பர் மாதம் மாற்றப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏ.எஸ்.பச்சாபுரே நியமிக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு, ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.டி.முனோலி நியமிக்கப்பட்டார். முனோலி ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா நியமிக்கப்பட்டார்.
நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா விசாரணை நடத்தியபோதுதான் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, ஜெயலலிதாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரனிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தல், வழக்கறிஞர்களின் இறுதி வாதம் போன்றவை இவர் நீதிபதியாக பணியாற்றியபோது நடைபெற்றது.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெற்ற பிறகு, இவ்வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கைக்கு சென்றது. மிகவும் கண்டிப் பானவர் என பெயர் எடுத்த டி'குன்ஹா, வழக்கை தாமதப்படுத்தும் செயல்களை அனுமதிக்காமல் விரைவாக பணியாற்றினார்.
இறுதி வாதத்தின்போது, வழக்கின் விசாரணையை தாமதப் படுத்தவும், நீதிமன்றத்திடம் இருந்து உண்மை களை மறைக்கவும் முயற்சிப் பதாக குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்கு அவர் கண்டனம் தெரிவித் திருந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.