

3 மாநிலங்களில் காங்கிரஸூக்கு மக்கள் வெற்றியை தேடி தந்துள்ளனர், பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு எதிரான வெற்றி இது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நாடுதழுவிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பேசும் மக்களின் தாயகமான மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகளால் அதிர்ந்து இருந்த காங்கிரஸூக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 மாநில தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு இன்று வந்த அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘3:0 என்ற அடிப்படையில் காங்கிரஸ்க்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளனர். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு எதிரான வெற்றி இது. இந்த வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.