Last Updated : 04 Dec, 2018 02:38 PM

 

Published : 04 Dec 2018 02:38 PM
Last Updated : 04 Dec 2018 02:38 PM

பசு குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது இக்லக் வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு கொலையா?- புலந்த்சாகர் வன்முறையில் வெறிச்செயல்

உத்தரப்பிரதேசத்தில் பசு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கடந்த 2015ம் ஆண்டு பசு குண்டர்களால் அடித்துக்கொல்லப்பட்ட முகமது இக்லக் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் புலந்த் சாகர் வன்முறையில் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று அவரின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தாத்ரி மாட்டிறைச்சி கொலை

2015-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் 55 வயதான முகமது இக்லக் என்பவர் வீட்டில் பசு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பசு குண்டர்கள் அவரை அடித்துக்கொன்றனர். வீட்டுக்குள் இருந்த முகமது இக்லக்கையும், அவரின் மகன் தானிஷையும் வெளியே இழுத்து வந்து பசு குண்டர்கள் அடித்து உதைத்தனர். இதில் இக்லக்கின் மகன் மட்டும் உயிர்பிழைத்தார், இக்லக்கொல்லப்பட்டார்.

அடித்துக்கொல்லப்பட்ட முகமது இக்லக் வழக்கை புலந்த்சாகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் விசாரித்து வந்தார்.

கலவரம்

bulandjpgjpgபுலந்த் சாகரில் வன்முறையில் தீக்கிரையான வாகனங்கள்: படம் பிடிஐ100 

 

இந்நிலையில், புலந்த்சாகரின் சிங்கராவதி பகுதியில் உள்ள ஒரு வயல்பகுதியில் பசுமாட்டின் உடல்பகுதிகளும், கன்றுக்குட்டியின் உடலும் இருந்ததாக் கூறி நேற்று ஒரு கும்பல் சாலை மறியல் செய்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க வந்த போலீஸார் மீது அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது,

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து அந்தக் கும்பல் வன்முறை வெறியாட்டம் நடத்தினார். வன்முறை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அதேசமயம், வன்முறையாளர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சந்தேகம்

இந்நிலையில், முகமது இக்லக் வழக்கை விசாரித்த சுபோத் குமார் சிங் கலவரத்தை அடக்கச் சென்றபோது கல்வீச்சில் கொல்லப்பட்டாரா அல்லது திட்டமிட்டு இவரைக் கொல்ல வேண்டும் என்பதற்காகக் கலவரம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை இன்ஸ்பெக்டரின் சகோதரி எழுப்பியுள்ளார்.

மேலும், வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் இந்து வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்ட கொலையா?

cop-sisterjpgஇன்ஸ்பெக்டரின் சகோதரி: படம் ஏஎன்ஐ100 

இதுகுறித்து கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத்சிங்கின் சகோதரி கூறுகையில், “ முதல்வர் ஆதித்யநாத் எப்போது பார்த்தாலும் பசு மாடு ,பசு மாடு என்றே இருக்கிறார் என்னுடைய சகோதரர் சுபோத் குமார் சிங் முகமது இக்லக் கொலை வழக்கை விசாரித்து வந்ததால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில்சதி நடந்திருக்கிறது. என் சகோதரர்கொல்லப்பட்டதற்காக அரசு அளிக்கும் பணம் தேவையில்லை, அவரைத் தியாகி எனஅறிவிக்க வேண்டும். ” என சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறார்.

அடுத்தது யாருடைய அப்பா?

sop-sonjpgஇன்ஸ்பெக்டரின் மகன் அபிஷேக் : படம் ஏஎன்ஐ100 

கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் அபிஷேக் கூறுகையில் “ மதத்தின் பெயரால் எந்தவிதமான வன்முறையும் நிகழக்கூடாது என்பதில் கவனமாக என் தந்தை இருந்தார். நல்ல குடிமகனாக வாழ வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால், இன்று இந்து, முஸ்லிம் கலவரத்தால் என்தந்தை அடித்துக்கொல்லப்பட்டார். நாளை யாருடைய தந்தை அடித்துக் கொல்லப்படப் போகிறார்களோ தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x