Last Updated : 15 Dec, 2018 08:07 AM

 

Published : 15 Dec 2018 08:07 AM
Last Updated : 15 Dec 2018 08:07 AM

போர் விமான கொள்முதல் நடைமுறை முழு திருப்தி அளிக்கிறது: ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை- எத்தனை விமானங்கள் வாங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு; உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்களை உச்ச நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் தில் முறைகேடுகள் நடக்கவில்லை. விமான கொள்முதல் நடைமுறை முழுதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டில் பிரான் ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. இதில் 18 விமானங்களை முழுமை யாக தயார் செய்யப்பட்ட நிலை யில் ஒப்படைக்கவும் மீதமுள்ள 108 விமானங்களை இந்தியாவில் வடிவமைக்கவும் திட்டமிடப் பட்டிருந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு, முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவை கைவிட்டது. எனினும் கடந்த 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது, தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங் களை வாங்க ஒப்பந்தம் கையெழுத் தானது. இந்த போர் விமானங்களை தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்துடன் தஸ்ஸோ நிறு வனம் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்தப் பின்னணியில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட் டின. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலை கொடுத்து போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. விமானத்தை வடிவமைக்கும் பணி பொதுத் துறை நிறுவனமான எச்ஏஎல்-க்கு வழங்கப்படாமல் அம்பானி நிறு வனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட் டியது.

இதைத்தொடர்ந்து இந்த ஒப் பந்தம் தொடர்பாக நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனோகர் லால் சர்மா, வினீத் தண்டா, பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.

ரஃபேல் போர் விமான கொள் முதல் நடைமுறையில் எவ்வித முறைகேடும் இல்லை. ஒப்பந்த நடைமுறை முழுதிருப்தி அளிக் கிறது. எத்தனை போர் விமானங் களை கொள்முதல் செய்ய வேண் டும் என்பது அரசின் கொள்கை முடிவு. முதலில் திட்டமிட்டபடி 126 போர் விமானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. போர் விமானத்தின் அன்றைய விலை, இன்றைய விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது.

ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்சர் நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் என்பது உண்மைதான். எனினும் இந்த விவகாரத்தில் தஸ்ஸோ நிறுவனமே இறுதி முடிவெடுக்க முடியும். இதில் அரசின் தலையீடு இருந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோம். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப் படுகின்றன" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நிர்மலா சீதாராமன் கருத்து

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் தின் கொள்கை முடிவு, விலை பட்டியல், வெளிஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் தவறும் நடக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்த சர்ச்சை களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையை நவீனப்படுத்த வேண்டியது அவசர அவசியம். அதற்காகவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை மறந்து ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் கதைகளை புனைந்தார். நேர்மையான ஒப்பந் தங்கள் குறித்து கேள்வி எழுப்பி னால் எதிர்காலத்தில் எந்தவொரு ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் தயங்கும் நிலை ஏற்படும்.

ராகுலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது நிரூபிக் கப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தரப்பில் வலி யுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்

l ரஃபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் எந்த இடத்திலும் சந்தேகம் எழவில்லை.

l இந்திய விமானப் படையில் நான்காம், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சேர்ப்பது அவசியம்.

l ரஃபேல் போர் விமானத்தின் தரத்தில் எவ்வித குறையும் இல்லை. இந்த விமானத்தின் அன்றைய விலை, இன்றைய விலையை ஒப்பிட்டு அலசுவது நீதிமன்றத்தின் பணி கிடையாது.

l விமான கொள்முதல் நடைமுறை, விலை, ரிலையன்ஸ் - தஸ்ஸோ ஒப்பந்தத்தில் தலையிட வேண்டிய அவசியம் எழவில்லை.

l ஒப்பந்த நடைமுறையில் வணிகரீதியாக குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

l பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனம் ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்க குறிப்பிட்ட இந்திய நிறுவனத்தை தேர்வு செய்ததில் எவ்வித தவறும் இல்லை.

l எத்தனை போர் விமானங்களை வாங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. 36-க்குப் பதிலாக 126 போர் விமானங்களை வாங்க அரசை நிர்பந்திக்க முடியாது.

l கடந்த 2016 செப்டம்பரில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி

ரஃபேல் போர் விமான விவகாரத்தால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.

பிரான்ஸுடனான ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின் தாக்கம் நாடாளுமன்ற அவை களில் எதிரொலித்தது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத் தின்போது மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுந்து பேசும்போது, “ரஃபேல் விமான விவகாரத்தில் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்று வழங்கியுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற் பட்டதையடுத்து அவை ஒத்திவைக்கப் பட்டது.

பகல் 12 மணிக்கு மீண்டும் அவை கூடியபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, “ரஃபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறான கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை திசைதிருப்பினார். எனவே இதுதொடர்பாக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். அதே நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக அஇஅதிமுக உறுப்பினர்களும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர்.

அப்போது “தெருவுக்கு தெரு கூச்சல். ராகுல் காந்தி திருடன்” என்று பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ரஃபேல் விவகாரம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸார் கோரிக்கை எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. அவை முன்னவரும் நிதித்துறை அமைச்சருமான, அருண் ஜேட்லி பேசும் போது, “ரபேல் விமான விவகாரம் தொடர் பாக, பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் மனு கொடுத்துள்ளன. எனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்படுகிறது” என்றார்.

அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்களும் புலந்த்ஷெகர் கலவரம் தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினர்.

மேலும் ரபேல் விவகாரம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x