

பின்தங்கிய மாவட்டங்கள், பழங்குடியினர் பகுதிகளில் மட்டுமே ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்தியது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னரும் இத்திட்டம் தொடருகிறது.
இந்நிலையில் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘பொருளாதாரத்தில் முன்னேறிய பகுதிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தேவையில்லை. ஏழைகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் அவசியம்’’ என்று தெரிவித்தார்.