

ஆதார் அட்டை திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.
ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசனத்தன்படி செல்லும். வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் கட்டாயம். அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் எற்லும் ஆதார் இல்லை என்பதற்காக குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை மறுக்கக்கூடாது. வங்கிக் கணக்குகள், சிம்கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இம்தியாஸ் அலி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தார்.