

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 15-ல் தமிழக பாஜகவினருடன் வீடியோ திரைமூலம் உரையாடுகிறார். சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடியுடனான உரையாடலுக்காக ஐந்த மாவட்டங்களில் முக்கிய இடம் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து மோடியுடன் உரையாடி மகிழ பாஜகவினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அந்நிகழ்ச்சியின் தமிழக அமைப்பாளர் ஜி.பிரித்வீ கூறும்போது, ‘இந்த ஐந்து இடங்களிலும் பிரதமர் மோடி உருவத்தின் கட்-அவுட்டும் வைக்கப்பட உள்ளது. இதனுடன் நின்று பாஜகவினர் தம் கைப்பேசிகளில் செல்பிக்களும் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்தார்.
இங்கு கூடும் கூட்டத்தில் பாஜகவின் கட்சி நிதிக்காக பணமும் வசூலிக்கப்பட உள்ளது. அதில் விருப்பம் உள்ளவர்கள் ரூ.5 முதல் 1000 வரை நன்கொடை அளிக்கலாம். இதற்காக நரேந்திர மோடி எனும் பெயரில் கைப்பேசிக்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய ஐந்து மாவட்டங்களின் இடங்களிலும் உதவவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எதிர்பார்க்கபடும் பிரதமரின் மோடியுடனான உரையாடலை புரிந்து கொள்ள வேண்டி மொழிபெயர்ப்பாளர்களும் அமர்த்தப்பட உள்ளனர்.
இதில் பாஜகவினர் அல்லாமல் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களின் ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு கேள்வியை தேர்வு செய்து அதற்காக பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். இதன்மூலம், பிரதமர் மோடியே மக்களவை தேர்தலுக்கான பாஜக
பிரச்சாரத்தை தமிழகத்தில் துவக்கி வைப்பதாகக் கருதப்படுகிறது.