நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தம் செய்த தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தம் செய்த தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தங் கள் மேற்கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலங் கானா, குஜராத், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள், ‘நில ஆர்ஜித சட்டத்’தில் திருத்தங்கள் மேற் கொண்டுள்ளன. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அப்போது அவர் வாதிடுகையில் கூறியதாவது:

மத்திய சட்டத்தின் அடிப்படை அமைப்புக்கு எதிராக 5 மாநிலங் கள் நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளன. வலுக்கட்டாயமாக நில ஆர்ஜிதம் செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய சட்டம் அமைந்துள்ளது. ஆனால், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், கிட்டத்தட்ட எல்லா நிலங்களுக்கும் விலக்கு வழங்கப் பட்டுள்ளது.

அத்துடன், நில ஆர்ஜிதம் செய்வதற்கு முன்னர் பொதுமக்களி டம் கருத்துக் கேட்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அம்சத்தையும் மேற்கூறிய 5 மாநிலங்கள் நீக்கியுள் ளன. மேலும், அரசியலமைப்பு சட்டம், பிரிவு 21-ல் அனைவரும் கண்ணியத்துடன் வாழ்வதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றக் கூடாது என்ப தும் அடங்கும். இதற்கு எதிரானதாக 5 மாநிலங்கள் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. அடிப்படை உரிமையை மீறியதாக இந்தச் சட்டத் திருத்தம் உள்ளது. எனவே, சட்டத்திருத்தங்கள் சட்டவிரோதம் என்றும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற் கான மசோதாவை நாடாளுமன் றத்தில் மத்திய அரசால் நிறை வேற்ற இயலவில்லை. இதனால் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது. எனவே நில ஆர்ஜித சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. எனவே மாநில சட்ட திருத்தங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு பிரசாந்த பூஷண் வாதாடினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 5 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in