

கண்பார்வையற்ற மாணவிக்காகத் தேர்வு எழுதிய தெலுங்கு நடிகர் தனிஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தனிஷ் அல்லாடி. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை, எதிர்மறையான விஷயங்களில் சிக்கியதால் அவருக்கு பிக்பாசில் நல்ல பெயர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கண்பார்வையற்ற மாணவி ஒருவருக்கு உதவும்பொருட்டு தனீஷ் தேர்வு எழுதியது அவரது இமேஜை உயர்த்தியுள்ளது. அதாவது பேஸ்புக்கில் கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுத முடியாததால் அவருக்கு உதவுமாறு அழைப்பு பகிரப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த நடிகர் தனிஷ் உடனே அந்த மாணவியைத் தொடர்பு கொண்டு தான் உதவுவதாகத் தெரிவித்தார். அதன்படி தேர்வு எழுதி மாணவி வெற்றி பெற உதவியுள்ளதோடு பண உதவியும் செய்துள்ளார்.
இது இவரது இமேஜை மக்களிடையே உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.