Published : 12 Dec 2018 09:08 PM
Last Updated : 12 Dec 2018 09:08 PM

ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள 300 பைகளுடன் யாராவது அயல்நாடு செல்வார்களா?- விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை கேள்வி

மார்ச் 2016-ல் விஜய் மல்லையா இந்தியாவை விட்டுச் சென்றது ஜெனீவாவில் நடைபெற்ற உலக மோட்டார் ஸ்போர்ட் கூட்டத்துக்காகத்தானே தவிர நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கம் இல்லை என்று விஜய் மல்லையா வழக்கறிஞர் புதனன்று சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத் துறை வழக்கறிஞர் பதிலடி கொடுத்தார்.

 

மல்லையாவின் வழக்கறிஞர் அமித் தேசாய், விஜய் மல்லையா நாட்டை விட்டு ஒன்றும் ரகசியமாக வெளியேறவில்லை என்று வாதிட்டார். “ரகசியமாக செல்லவில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு கூட்டத்துக்காகவே அவர் சென்றார்” என்றார்.

 

ஆனால் அமலாக்கத்துறை வழக்கறிஞர் டி.என்.சிங், “அவர்  இந்தியாவை விட்டு ஜெனீவா கூட்டத்துக்காகத்தான் சென்றார் என்பதற்கு அவர்களிடத்தில் எந்த வித ஆதாரமும் இல்லை. மிகப்பெரிய லக்கேஜுகளுடன் சுமார் 300 பைகளுடன் யார் கூட்டத்துக்காக வெளிநாடு செல்வார்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

 

மேலும் எவ்வளவு முறை சம்மன்கள் அனுப்பியும் மல்லையா விசாரணைக்கு வரவில்லை. லண்டனில் அவரை இந்தியா கொண்டு வர நடந்து வரும் வழக்கே அவர் இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணத்தில் இல்லை என்பதை பறைசாற்றுகிறது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

“அவர் இந்தியாவுக்கு வந்து விடக்கூடாது என்றுதான் வாதிடுகிறார், ஏனெனில் இந்த வழக்கே அரசியல் ரீதியானது என்கிறார், ஆகவே அவருக்கு இந்தியா திரும்பும் எண்னம் ஒரு போதும் இருந்ததில்லை” என்றார் வழக்கறிஞர் டி.என்.சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x