Published : 03 Dec 2018 09:59 AM
Last Updated : 03 Dec 2018 09:59 AM

டிசம்பர் 10-ல் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் 11-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் 10-ம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இதில் ராமர் கோயில் விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்க உள்ளன.

இந்த கூட்டத்தில் எடுக்கப் படும் முடிவின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று தெரிகிறது.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் 11-ம் தேதி எண்ணப் படுகின்றன. அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடுவதால் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x