

முத்தலாக் தடை திருத்த மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டிருப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத் தின் தலைவர் ரேகா சர்மா கூறிய போது, முத்தலாக் நடைமுறை யால் முஸ்லிம் பெண்கள் கடு மையாகப் பாதிக்கப்படுகின்றனர். மசோதாவை நிறைவேற்றக் கோரி சுமார் 10,000 பெண்கள் எழுத்துப்பூர்வமாக மனு அளித் துள்ளனர். தற்போது மக்களவை யில் மசோதா நிறைவேறி யிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய உறுப்பினர் இலியாஸ் கூறியபோது, “மக்களவைத் தேர்தலுக்காகவே முத்தலாக் தடை திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் பெண் களுக்கு ஆதரவு என்று கூறி முஸ்லிம் ஆண்களுக்கு தண் டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டங்கள் தேவை யில்லை” என்று தெரிவித்தார்.
பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் உறுப்பினர் ஜாகியா சோமன் கூறியபோது, “முத்தலாக் தடை திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியிருப்பதை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.