ஆந்திர போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.2.76 கோடி இழப்பு

ஆந்திர போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.2.76 கோடி இழப்பு
Updated on
1 min read

ஆந்திர அரசு பஸ் போக்குவரத்து கழகம் தினமும் ரூ.2.76 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தற்போது தனியாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 10,576 அரசு பஸ்கள் உள்ளன. இவை மூலம் தினமும் சராசரியாக 64.21 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், ஒரு பஸ் மூலம் தினமும் ரூ. 13,233 வருவாய் கிடைக்க வேண்டும்.

இதற்கு பதில் ரூ.10,945 மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு ஆந்திர பஸ் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2.76 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

ஏற்கெனவே ரூ.2,563 கோடி நஷ்டத்தில் உள்ள ஆந்திர அரசு பஸ் போக்குவரத்து கழகம், தற்போது இந்த இழப்பால் ரூ.2,645 கோடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பஸ் கட்டணத்தை உயர்த்த ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in