ம.பி.யில் கடும் இழுபறி: முன்னணிக்கு மாறிய பாஜக

ம.பி.யில் கடும் இழுபறி: முன்னணிக்கு மாறிய பாஜக
Updated on
1 min read

இன்று வெளியாகி வரும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், ம.பி.யில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இங்கு காலை முதல் காங்கிரஸுக்கு இருந்த முன்னணி பாஜகவிற்கு மாறியுள்ளது.

ம.பி.யில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் முன்னணி வகித்து வந்தது. எனினும், இந்த முன்னணி எண்ணிக்கை அதிகமாக இருக்கவில்லை.

15 தொகுதிகளாக காங்கிரஸ் இருந்த முன்னணி நிலை குறைந்தபடி வந்துள்ளது. தற்போது இந்த முன்னணி நிலை மாறி பாஜகவின் வெற்றி நிலை தெரிகிறது. காங்கிரஸ் 113-ம் பாஜக 117-ம் என முன்னணி தொகுதிகள் மாறி வருகின்றன. இதனால், அங்கு இழுபறி தொடங்கி உள்ளது.

இதர கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ம.பி.யில் நான்கு தொகுதிகள் தெரிகின்றன. எனவே, காங்கிரஸின் வெற்றி ம.பி.யில் கேள்விக்குறியதாகி விட்டது. இதன் பின்னணியில், மாயாவதியின் தனித்துப் போட்டி காரணமாகக் கருதப்படுகிறது.

இதேபோல், ம.பி.யில் தொடர்ந்து மூன்று முறையாக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நிலவுகிறது. இங்கு நான்காவதாகவும் பாஜக ஆட்சி அமைய அக்கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் காரணமாகி விட்டனர். பாஜகவில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டவர்கள் அக்கட்சியின் வாக்குகள் பிரியக் காரணமாகி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in