

ஹைதராபாத்தில் சகோதரிகளான 3 பெண் மாவோயிஸ்ட்களை விசாகப்பட்டினம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் பெண் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்ப தாக விசாகப்பட்டினம் புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. இதன் அடிப்படையில், அவர்கள் கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் முகாமிட்டு பெண் மாவோயிஸ்ட்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் மவுலாளி என்ற பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த 3 பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். பவானி, அன்னபூர்ணா, அனுஷா ஆகிய இந்த மூவரும் சகோதரிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மாவோயிஸ்ட் பிரிவின் தலைவர் ஆர்.கே. என்றழைக்கப்படும் ராமகிருஷ்ணா விடம் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் அனுஷா ஆர்.கே.வின் மெய்க்காப்பாளராகவும் பணி யாற்றி உள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட வர்கள் என்றும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள் ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவ தாக விசாகப்பட்டினம் போலீ ஸார் தெரிவித்தனர்.