

செவ்வாய் கிரகத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், இன்று செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் ஒன்றை ஒன்று ட்விட்டரில் நலம் விசாரித்துள்ளன.
குழப்பமடைய வேண்டாம். செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு விண்கலன்களின் சார்பில், ட்விட்டர் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விண்கலன்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து அனுப்பும் முக்கியச் செய்திகள் மற்றும் படங்கள் இந்த கணக்குகளில் விஞ்ஞானிகளால் பகிரப்படும்
இன்று வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்காள்யானுக்கு, நாசாவின் கியூரியாஸிடி ட்விட்டர் கணக்கிலிருந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு இஸ்ரோ விண்கலத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து நன்றியும், "தொடர்பிலிருக்கவும், நான் அங்கு தான் சுற்றிக் கொண்டிருப்பேன்” என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.