

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகர் கள் பயணிப்பதற்காக இத் தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள சிலருக்கு 10 சதவீதம் லஞ்சம் வழங்கியதாக இத்தாலியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 5-ம் தேதி இந்தியாவுக்கு அவர் அழைத்து வரப்பட்டார். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. சிபிஐ காவல் முடிந்ததையடுத்து, மைக்கேல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் மைக்கே லின் காவலை மேலும் 9 நாட் களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. மேலும் பிரிட்டன் தூதரக அதி காரிகள் மைக்கேலை சந்திக்கவும் அவர்கள் சொந்தமாக வழக்கறி ஞரை நியமித்து வாதாடவும் அனுமதிக்க சிபிஐ ஒப்புக் கொண் டது. இதையடுத்து, மைக்கேலின் சிபிஐ காவலை மேலும் 5 நாட் களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தர விட்டார். மேலும் மைக்கேலின் வழக்கறிஞர், தினமும் காலையும் மாலையும் தலா 30 நிமிடங்கள் அவரை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.