பாடகரை மணந்தார் பிரியங்கா சோப்ரா

பாடகரை மணந்தார் பிரியங்கா சோப்ரா
Updated on
1 min read

ஆண்டில் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதைத் தொடர்ந்து தமிழில் தமிழன் படத்தில் நடிகர் விஜய்யுடன் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 2008-ல் இவர் நடித்த பேஷன் இந்திப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் 36 வயது பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த 26 வயது பாப் பாடகர் நிக் ஜோனஸும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதைத் தொடர்ந்து இரு குடும்பத்தாரின் சம்மதம் பெற்று திருமணத்தை இருவரும் அறிவித்தனர். கடந்த ஆகஸ்டில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரின் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. கிறிஸ்தவ முறைப்படி முதலில் திருமணம் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in