ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 இடங்கள்; பிஹாரில் பாஜக - நிதிஷின் ஐஜத தலா 17 தொகுதிகளில் போட்டி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவிப்பு

ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 இடங்கள்; பிஹாரில் பாஜக - நிதிஷின் ஐஜத தலா 17 தொகுதிகளில் போட்டி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவிப்பு
Updated on
1 min read

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலை யில் தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. மாநிலங் களில் கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு குறித்தும் பிற கட்சிகளுடன் பாஜக பேசி வருகிறது. பிஹாரில் பாஜக கூட்டணி யில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வா னின் லோக் ஜனசக்தி கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் நிதிஷ் குமார் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன் பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அமித்ஷா கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவும் ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடும். லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பிஹாரில் இருந்து அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் அணி சார்பில் ராம்விலாஸ் பஸ்வான் தேர்வு செய்யப்படுவார். பிஹாரில் கடந்த தேர்தலில் 31 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. வரும் மக்களவைத் தேர்தலில் அதைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம். மத்தியிலும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in