

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஒரு சில இடங்களில் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. மாநிலம் முழுவதுமே கடைகள், பிற வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசே விடுப்பு அறிவித்து விட்டது. அரசு அலுவலகங்களிலும் பணியா ளர்கள் வருகை மிகக் குறைவாக இருந்தது. பஸ், ரயில்கள் ஓடாததால் பஸ் நிறுத்தங்களிலும், ரயில் நிலையங்களிலும் ஏராளமான பயணிகள் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. கன்னூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளூர் தலைவர் கே.டி. மனோஜ் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அவரை படுகொலை செய்தனர் என்ற பாஜக, ஆர்எஸ்எஸ் குற்றம்சாட்டியுள்ளது.