Published : 19 Dec 2018 08:42 am

Updated : 19 Dec 2018 08:42 am

 

Published : 19 Dec 2018 08:42 AM
Last Updated : 19 Dec 2018 08:42 AM

பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவரது சிஷ்யை ஒருவர் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த அக்டோபரில் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆனது. இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை பாஸ்போர்ட்டை புதுப் பிக்கக் கூடாது என ராம்நகர் போலீ ஸார் அனுமதி மறுத்த‌னர். கடந்த இரு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நித்யானந்தா பாலியல் பலாத்கார வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ராம்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தயானந்த் கூறுகையில், ‘‘நித்யா னந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆகியுள்ளதால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்க வாய்ப்பு இல்லை. விரைவில் அவரை கைது செய்வோம்''என்றார்.

இதனிடையே நித்யானந்தா வட இந்தியாவில் இருந்து உத்தரபிரதேச அரசியல்வாதி களின் உதவியுடன் சாலை மார்க்கமாக நேபாளத்துக்கு சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் சென்றதாகக் கூறப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author