

சபரிமலை விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேரள சட்டப்பேரவை தொடர்ந்து 3-வது நாளாக நேற்று முடங்கியது.
சபரிமலையில் அமல்படுத்தப் பட்டுள்ள தடை உத்தரவுகளை வாபஸ் பெறக் கோரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி (யுடிஎப்) உறுப் பினர்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று 3-வது நாளாகவும் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை நேற்று காலை 9 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் உட்பட அனைத்து அலுவல் களையும் ஒத்திவைத்துவிட்டு, சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி யினர் வலியுறுத்தினர். மேலும், ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸையும் அவர்கள் வழங் கினர். இதனை ஏற்க மறுத்த சட்டப் பேரவைத் தலைவர், சபரிமலை விவகாரம் குறித்து பல மணிநேரம் பேசப்பட்டுவிட்டது என்பதால் மற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சியினர் அமளி யில் ஈடுபட்டனர். இதனால் அவை யில் கூச்சம் குழப்பம் நிலவயிது. இதனைத் தொடர்ந்து, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது. - பிடிஐ