Published : 21 Dec 2018 08:18 AM
Last Updated : 21 Dec 2018 08:18 AM

கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்த சம்பவம்; தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட கர்நாடகாவில் 7 பேர் கைது

கர்நாடகாவில் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்ட 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுல்வாடி கிராமத்தில் கிச்சுகட்டி மாரம்மா கோயில் உள்ளது. தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையை கைப்பற்ற சின்னப்பி என்பவருக்கும், மேலாளர் மாதேஷாவுக்கும் இடையே நீண்ட காலமாக போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தக் கோயி லில் கோபுரம் அமைக்கும் பணியை முன்னிட்டு, கடந்த 15-ம் தேதி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இதனை சாப்பிட்ட 15 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந் தனர். பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மேலாளர் மாதேஷா, சமையலர் புட்டசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், கோயில் மேலாளர் மாதேஷா, அவரது மனைவி அம்பிகா, கோயில் பூசாரி இம்மடி மகாதேவசாமி ஆகிய 3 பேரும் சின்னப்பி தரப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், மற்றொரு பூசாரி தொட்டய்யா என்பவர் மூலமாக பிரசாதத்தில் விஷம் கலந்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதன்பேரில், மேற்குறிப்பிட்ட 4 பேர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில், தொட்டய்யா, மாதேஷா உள்ளிட்ட 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x