தண்டனை பெற்ற எம்எல்ஏ தகுதி நீக்கம்

தண்டனை பெற்ற எம்எல்ஏ தகுதி நீக்கம்
Updated on
1 min read

பிஹாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் ராஜ் பல்லப் யாதவ். 2016-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் பாட்னா சிறப்பு நீதிமன்றம் ராஜ் பல்லப் யாதவ் குற்றவாளி என்று டிசம்பர் 15-ம் தேதி அறிவித்தது. கடந்த 21-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ராஜ்பல்லப் யாதவின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிஹார் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 15-ம் தேதி முதல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிஹார் சட்டப்பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்களின் பலம் 79 ஆக குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in