

வயது வரம்பில் ஒப்பிட்டீல் காங்கிரஸை விட பாஜக ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் வயதில் சிறியவர்களாக இருப்பது எனத் தெரியவந்துள்ளது. இதேபோல், பாஜகவின் பெரும்பாலான முதல்வர்கள் புதிய முகங்களாகவும் அமைந்துள்ளனர்.
பாஜக ஆளும் நான்கு மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் ஐம்பது வயதிற்கும் குறைவாக உள்ளனர். உபியில் யோகி ஆதித்யநாத் 46, மகராஷ்டிராவின் தேவேந்திர பத்னாவீஸ் 48, அருணாச்சலப் பிரதேசத்தின் பிமா காண்டு 39 மற்றும் திரிபுராவின் பிப்லப் குமார் தேவ் 47 ஆகியோர் ஆவர்.
இவர்களில், கோவாவின் மனோகர் பரீக்கர்(63) தவிர, ஹரியானாவின் மனோகர் லால் கட்டர் (64) மற்றும் ஜார்கண்டின் ரகுபர் தாஸ்(63) ஆகிய இருவரும் பதவி ஏற்றபோது அறுபது வயதை தாண்டவில்லை.
மத்தியபிரதேச மாநிலத்தில் 13 வருடங்கள் முதல்வராகத் தொடர்ந்த சிவராஜ்சிங் சவுகானும் இன்னும் 60 வயதை தாண்டவில்லை. எனினும், மூன்று மாநில வெற்றிக்கு பின் புதிய முதல்வர்களில் இருவரை 60 வயதுக்கும் அதிகமானவர்களாக காங்கிரஸ் அமர்த்தியுள்ளது.
காங்கிரஸின் புதிய முதல்வர்களில் சத்தீஸ்கரின் பூபேந்தர் பகேல்(59), மபியின் கமல்நாத்(72), மற்றும் அசோக் கெலாட் (67) ஆகியேர் உள்ளனர். இதற்கு முன் கடந்த வருடம் காங்கிரஸ் அமர்த்திய முதல்வர்களில் பஞ்சாபின் கேப்டன் அம்ரேந்தர்சிங்(76), புதுச்சேரியின் முதல்வர் வி.நாரயண்சாமி(71) ஆகியோரும் அறுபதை தாண்டியவர்களே.
இதேபோல், காங்கிரஸின் மூத்த தலைவர்களான பூபேந்தர் பகேல் மற்றும் கமல்நாத் தவிர மற்றவர்கள் முன்னாள் முதல்வர்கள். இதுபோல் அன்றி பாஜகவின் முதல்வர்களில் பெரும்பாலனவர்கள் புதிய முகங்களாகவும், முதன்முறை முதல்வர்களாகவும் உள்ளனர்