

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக இருந்தது. எனினும், விமானி சுதாரித்துக்கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் தங்கள் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, ஹெலிகாப்டரில் சென்றனர்.
ஹெலிகாப்டர் 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென பறவை ஒன்று ஹெலிகாப்டரின் முன் வந்து மோதியது. இதனால் ஹெலிகாப்டர் நிலை தடுமாறியது, எனினும் விமானி சுதாரித்து ஹெலிகாப்டரை இயக்கி, லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் அகிலேஷ் யாதவும், அவரது மனைவி டிம்பிளும் பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.