Published : 24 Sep 2014 09:50 AM
Last Updated : 24 Sep 2014 09:50 AM

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் நிறைவு: கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்காக அனைத்து ஏற்பாடு களும் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, சம்பிரதாய முறைப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று நடந்தது.

திருப்பதி ஏழுமலையானின் பிரம் மோற்சவ விழாவை பிரம்மா முன்நின்று நடத்துவதாக ஐதீகம். இவ்விழா, வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பக்தர்களுக்கு திருப்பதி-திருமலை இடையே பஸ் போக்குவரத்து வசதியை தேவஸ்தானம் அதிகப்படுத்தி உள்ளது. திருமலையில் முன் பதிவு தரிசன முறையையும், தங்கும் விடுதி முன்பதிவையும் தேவஸ்தானம் ரத்து செய் துள்ளது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களின் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. வாகன உலாவின் போது 4 மாடவீதிகளிலும் பக்தர்கள் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாட வீதிகளில் சுமார் 2.20 லட்சம் பக்தர்கள் அமர்ந்து திருவீதி உலாவை தரிசிக்கலாம்.

கருட சேவை

செப்டம்பர் 30-ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகனமான கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் வாகன மண்டபம் அருகே தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. ரூ. 300 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் பிரம் மோற்சவ விழாவின் போது தரிசனத்திற்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் தீர்மானித் துள்ளது. சுப்ரபாத சேவை தவிர அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம சாஸ்திரங் களின் படி ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திரு மஞ்சன நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில், தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி, ஆணிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க் கிழமை சுகந்த வாசனை திரவியங் களால் கோயில் சுத்தப்படுத்தும் பணி செய்யப்படுகிறது. மூலவர் சன்னதி, கொடிக்கம்பம், விமான கோபுரம் உள்ளிட்ட இடங்கள் குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், மஞ்சள், பன்னீர் போன்றவற்றால் சுத்தப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நேற்று காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x