

உத்தரபிரதேச மாநிலம் உன்னா வில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தச் சிறுமியை சுபான் சிங் என்பவரும் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுபான் சிங்கின் தந்தை ஹர்பால் சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சம்பந்தப்பட்ட பெண் (சிறுமி) வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டு, சில நாட்கள் கழித்து திரும்பியுள்ளார். பின்னர், திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சுபானை பெண்ணின் குடும்பத்தார் வற்புறுத்தினர். சுபான் மறுக்கவே அவரை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் சிக்க வைக்க சதி நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் அந்தப் பெண், அவரது தாய், மாமா உட்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது்.