ராஜஸ்தான் முதல்வராக அஷோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட்  தேர்வு

ராஜஸ்தான் முதல்வராக அஷோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட்  தேர்வு
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அஷோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கெலாட், சச்சின் பைலட் இடையே பல சுற்றுகள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி கடைசியில் இருவரையும் இதற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

3வது முறையாக தன்னை முதல்வராகத் தேர்வு செய்ததற்கு அஷோக் கெலாட் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார். தானும், சச்சின் பைலட்டும் நல்லாட்சி வழங்குவோம் என்று கெலாட் தெரிவித்தார்.

2019-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று இருவரும் ஆளுநரைச் சந்தித்து பதவிப்பிரமாணம் குறித்து பேசவுள்ளனர்.

கெலாட் முதல்வர் என்ற அறிவிப்பு வெளியானவுடன் கெலாட் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.  வெற்றிகரமாக பேச்சு வார்த்தையை நடத்தி முடிவு எடுத்ததையடுத்து ராகுல் காந்தி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருடனான புகைப்படத்தை வெளியிட்டு “ராஜஸ்தானின் இணைந்த வண்ணங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in