Published : 06 Aug 2014 09:19 AM
Last Updated : 06 Aug 2014 09:19 AM

‘சி’ பிரிவு நகரங்களுக்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெறுவதற்கு ‘சி’ பிரிவு நகரங்களுக்கு ஐந்து இலட்சம் மக்கள்தொகை என்பதை நான்கு இலட்சமாகக் குறைக்க வேண்டும் என அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து விஜிலா பேசிய தாவது: ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் என்பது நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நகரங் களின் வளர்ச்சிக்காக செயல் படுவது. இதில், எனது கவனத்தின் படி 67 நகரங்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானதாக தேர்தெடுக்கப்பட்டு உள்ளன.

இதன்படி அந்த நகரங்களின் மொத்த மக்கள் தொகை ஐந்து லட்சமாக இருக்க வேண்டும். இதை நான்கு அல்லது அதற்கும் குறைவான மக்கள் தொகை எனக் குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் எனது ஊரான திரு நெல்வேலி உட்பட தமிழகத்தின் பல நகரங்களும் அந்த திட்டத்தில் பயன்பெறும்.’ என்றார்.

கூடுதல் நோட்டரிகள்

மத்திய, மாநில அரசுகள் தற்போது முறையே 725 மற்றும் 1,088 அரசு அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர் களை (நோட்டரி) நியமிக்க முடியும். தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ள மக்கள் தொகை, நீதிமன்றங்கள் மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் மாநில அரசின் நியமன எண்ணிக்கையை 1,088-ல் இருந்து 2,500 என உயர்த்தவேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கோரினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x