Last Updated : 23 Dec, 2018 07:25 AM

 

Published : 23 Dec 2018 07:25 AM
Last Updated : 23 Dec 2018 07:25 AM

கர்நாடகாவில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடகாவில் 2-வது முறை யாக அமைச்சரவை விரிவுபடுத் தப்பட்டுள்ளது. இதில் காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச் சர்களாக பதவியேற்றுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரும் மே 23-ம் தேதி பதவியேற்றனர். கடந்த ஜூன் 6-ம் தேதி காங்கிரஸை சேர்ந்த 15 பேரும், மஜதவை சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு 2-வது முறையாக நேற்று அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் எம்எல்ஏக் களான எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி, நாகராஜ், துக்கா ராம், திம்மாபுரா, பரமேஷ்வர் நாயக், ரஹீம் கான், சிவல்லி ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஆளுநர் மாளிகை யில் நடைபெற்ற எளிய விழாவில் இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x