Published : 15 Dec 2018 09:05 AM
Last Updated : 15 Dec 2018 09:05 AM

ரஃபேல் - ஒரு கண்ணோட்டம்

# ஆகஸ்ட் 28, 2007: 126 நடுத்தர பல் ஆற்றல் போர் விமானம் வாங்க, பாதுகாப்புத் துறை அமைச்சகம் கோரிக்கை.

# செப்டம்பர் 4, 2008: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் (ஆர்ஏடிஎல்) தொடக்கம்.

# மே, 2011: ரஃபேல், ஈரோபைட்டர் ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப் படை சம்மதம்.

# ஜனவரி 30, 2012: குறைந்த விலையில் ரஃபேல் விமானங்களை விற்க தஸ்ஸோ நிறுவனம் முன்வந்தது.

# மார்ச் 13, 2014: எச்ஏஎல், தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் இடையே விமான தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து.

# ஆகஸ்ட் 8, 2014: 4 ஆண்டுகளில் 18 விமானங்களைத் தயாரித்து தரும் என தஸ்ஸோ அறிவித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு. மீதமுள்ள 108 விமானங்கள் அடுத்த 7 ஆண்டுகளில் விநியோகம் எனவும் அறிவிப்பு.

# ஏப்ரல் 8, 2015: தஸ்ஸோ, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், எச்ஏஎல் நிறுவனம் இடையே விரிவான விவாதம் நடைபெறுவதாக வெளியுறவுத் துறை செயலர் அறிவிப்பு.

# ஏப்ரல் 10, 2015: 36 விமானங்களை வாங்குவதற்காக புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

# ஜனவரி 26, 2016: 36 விமானங்கள் வாங்க இந்தியா, பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்.

# செப்டம்பர் 23, 2016: இரு நாடு அரசுகளிடையே ஒப்பந்தம் பரிமாற்றம்.

# நவம்பர் 18, 2016: ரஃபேல் விமானத்தின் விலை உத்தேசமாக ரூ.670 கோடி இருக்கும் என நாடாளுமன்றத்தில் அரசு அறிவிப்பு.

# டிசம்பர் 31, 2016: 36 விமானங்கள் ரூ.60 ஆயிரம் கோடிக்கு விற்கப்படுவதாக தஸ்ஸோ நிறுவன ஆண்டறிக்கையில் தகவல்.

# மார்ச் 13, 2018: ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்திய அரசின் முடிவு குறித்து விசாரிக்கக் கோரி பொது நலன் மனு.

# செப்டம்பர் 5, 2018: மனு விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

# அக்டோபர் 10, 2018: விமானம் வாங்குவது தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

# அக்டோபர் 24, 2018: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

# நவம்பர் 31, 2018: ரஃபேல் போர் விமானம் தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

# நவம்பர் 14, 2018: ரஃபேல் வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு.

# டிசம்பர் 14: ரஃபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் சரியே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x