Last Updated : 01 Dec, 2018 10:01 AM

 

Published : 01 Dec 2018 10:01 AM
Last Updated : 01 Dec 2018 10:01 AM

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித் துள்ள நிலையில், அதனைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை யில் ஈடுபட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ. 5,912 கோடி செலவில் புதிய அணைக் கட்ட அம்மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித் துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள் ளதற்கு தமிழக அரசும், கட்சி களும் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. மத்திய அரசு மேகே தாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி நேற்று நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகேதாட்டு அணை திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை எதிர்கொள்வது குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் டி.கே.சிவ குமார் காவிரி வழக்கை கவனித்து வரும் மூத்த வழக்கறிஞர்கள் பி. வி. ஆச்சார்யா, நாகேஷ்வர ராவ், ரவிவர்ம குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப் போது காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து டெல்லி புறப் பட்டுச் சென்ற டி.கே.சிவகுமார் அங்கு கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞ ருமான ஃபாலி எஸ்.நாரிமனை சந்தித்து பேசினார். அப்போது மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அனுமதியை வைத்து, சட்ட ரீதியான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டி.கே.சிவகுமார் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதனிடையே மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக முதல்வர் குமாரசாமி வருகிற 6-ம் தேதி அனைத்துக்கட்சி தலை வர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்குமாறு கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக எம்பிக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x