Published : 14 Dec 2018 08:35 PM
Last Updated : 14 Dec 2018 08:35 PM

மல்லையா பற்றி நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது- நிதின் கட்கரி

விஜய் மல்லையா பற்றி நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கூறியிருக்கிறார்.

முன்னதாக, தனியார் நிறுவனம் ஒன்றின் ஒருங்கிணைத்த பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, "40 ஆண்டுகளாக விஜய் மல்லையா அவர் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு சரியான நேரத்தில் வட்டியைச் செலுத்தி வந்தார். விமானத் தொழிலில் நுழைந்த பின்னர் அவர் பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தார். அப்புறம் திடீரென அவரை திருடனாக்கிவிட்டனர்.

ஒரு நபர் 50 ஆண்டுகள் சரியாக வங்கிக் கடனைச் செலுத்திவிட்டு ஒரே ஒரு முறை செலுத்தத் தவறினால் அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறுவதா?" என்று பேசியதாக கூறப்பட்டது. இது பெருமளவில் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் இது குறித்து நிதின் கட்கரி, "நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் விஜய் மல்லையாவை ஆதரித்துப் பேசவில்லை. 40 ஆண்டுகள் ஒருவர் வங்கிக் கடனை சரியாக செலுத்த முடிந்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் 41-வது ஆண்டில் அவரால் அதை செலுத்த முடியாமல் போகும். மல்லையாவுக்கு அப்படித்தான் ஆனது. தொழிலில் லாபமும் நஷ்டமும் ஏற்றமும் இறக்கமும் வரும் என்றே கூறியிருந்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x